யாழில், பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியனம் பெற்றவர்கள் போராட்டம்!

பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனம் இரத்துச் செய்யப்பட்டமையை கண்டித்து, யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பயிலுனர் செயற்திட்ட உதவியாளராக, நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்ட நியமனத்தில், வடக்கு மாகாணத்திற்கு, ஆயிரத்து 440 பேர், பயிலுனர்களாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு, நியமனக் கடிதங்கள், மத்திய அரசினால் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றையதினத்தில் இருந்து இன்று காலை வரை நியமனக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் அனைவரும், யாழ். மாவட்ட செயலகத்தில் தமது நியமனத்தை பொறுப்பேற்க வருகை தந்திருந்தனர்.

இதன் போது, யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், எந்த ஒரு தகவலும் வழங்கப்படக் கூடாது என்ற நிபந்தனை அறிவித்து, குறித்த விண்ணப்பதாரர்கள், நியமனத்தை பொறுப்பேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனம் செய்யப்பட்டவர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!