யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையில் சந்திப்பு!

யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், ஆளுநருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு ஆளுநருக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், யாழ் மாவட்டத்தில் துடுப்பாட்டத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் அக்கடமியை ஸ்தாபிப்பதுடன், கிரிக்கட் விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதிலுள்ள சிரமம் தொடர்பிலும் கலந்தாய்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறு, யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகள், ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் வடமாகாணத்தின் விளையாட்டுத் திணைக்களத்தின் கீழ், கடினப்பந்தை இணைத்துக்கொண்டு வட மாகாண சபையின் ஊடாக இதற்கான அபிவிருத்தி நடவடிக்கைளுக்கு உதவுமாறும், யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக வடக்கு ஆளுநர் கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாண விளையாட்டுத்துறைக்கு சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!