சீரற்ற காலநிலையால் இதுவரை 80007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

சீரற்ற காலநிலையால் காலி, மாத்தறை , ஹம்பாந்தோட்ட, களுத்துறை, கொழும்பு, கம்பாஹா, கண்டி மற்றும் கேகல்ல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

20,815 குடும்பங்களைச் சேர்ந்த 80,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கலு, ஜின் மற்றும் நில்வல ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு அனர்த்த சூழ்நிலையையும் சமாளிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!