பொகவந்தலாவையில் லயன் தொகுதியில் தீ விபத்து!

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவையில் லயன் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் பெறுமதிமிக்க பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

நுவரெலியா பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லொய்னோன் கல்கந்த தோட்ட பகுதியில் 16 குடியிருப்புகளை கொண்ட லயன் தொகுதியில், நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்தில் பெறுமதிமிக்க பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

தீ பரவல் ஏற்பட்டதில் குறித்த லயன் குடியிருப்பில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதி அளவில் எரிவடைந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குடியிருப்பில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாகவே தீ விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பரவல் காரணமாக குடியிருப்பில் இருந்த மரப்பலகையினால் செய்யப்பட்ட பெறுமதிமிக்க கதிரை, குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி, கணனி, வானொலி, குடும்பத்தினரின் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், மற்றும் ஏனைய உபகரணங்கள் ஏரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தோட்ட மக்கள் இணைந்து ஏனைய குடியிருப்புகளுக்கு தீ பரவவிடாது கட்டுப்படுத்தியுள்ளனர்.

சம்பத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குடியிருப்பைச் சேர்ந்த ஐவர் தற்காலிகமாக அயலவர்கள் வீட்டில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!