மட்டக்களப்பில் மணல் கொள்ளையில் ஈடுபட்டோர் கைது!

மட்டக்களப்பில், மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில், மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றதாக, மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சி தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலையிலிருந்து சட்டவிரோதமான முறையில் காத்தான்குடிக்கு இரு டிப்பர் வாகனங்களில் மணலைக் கடத்தி வந்தபோது கடமையிலிருந்த பொலிசாரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!