மட்டக்களப்பில் ஒருவரைக் காணவில்லை!

மட்டக்களப்பு கல்லடி பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணாமல் போயுள்ளதாக, காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 9ஆம் திகதி கொழும்புக்கு வழக்கு ஒன்றிக்காக சென்ற கல்லடி புதுமுகத்துவாரம் வீதியை சேர்ந்த 76 வயதுடைய நடராஜா சாமித்தம்பி என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை கடந்த 15 நாட்களாக காணமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த நபர் கொழும்பு மகரகம நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஒன்றிக்காக 11ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகவுள்ள நிலையில் கடந்த 9ஆம் திகதி கொழும்புக்கு சென்றவர் 10 ஆம் திகதி மாரகம பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் 11ஆம் திகதி மாரகம நீதவான் நீதிமன்றில் ஆஜராக வேண்டிய குறித்த நபர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் காணாமல் போயுள்ளதாக, உறவினர்கள் தெரிவித்தனர்.

காணாமல்போனவரை அவரது பிள்ளைகள் தேடிவரும் நிலையில், கடந்த 16ஆம் திகதி மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!