சஜித் போட்டியிடுவது உறுதியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை-எஸ் எம் மரிக்கார்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்

குறித்த விடையம் தொடர்பாக உண்மைத்தன்மையை அறியும் நோக்கில் டான் செய்திகள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காரை தொடர்புகொண்டு வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (24) இரவு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெற்றதாகவும் இதன் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்

அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல உள்ளிட்ட அமைச்சர்களான கபீர் ஹசிம், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலரும கலந்தகொண்டிருந்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!