அம்பாறை,காரைதீவில் நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடல்!

அம்பாறை காரைதீவில், பெண்களுக்கு, நல்லிணக்கம் தொடர்பான ஆக்கத்திறன் மிக்க கலந்துரையாடல், நேற்று நடத்தப்பட்டது.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் ‘கடந்த காலத்தை குணப்படுத்த மற்றும் எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்’ எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் மற்றும் செயலமர்வு நேற்று காரைதீவில் நடைபெற்றது.

பிரதேச செயலகம் மற்றும் தேசிய இனங்களுக்கிடையிலான நட்பு அமைப்பு இணைந்து கிராம மட்ட பெண்கள் அமைப்பின் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான நல்லிணக்கம் தொடர்பான ஆக்கத்திறன் மிக்க கலந்துரையாடல் மற்றும் செயலமர்வு, காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் வழிகாட்டலில், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் டி.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் இணைப்பாளராக பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் குரூஸ் குணரத்தினம், வளவாளர்களாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.ஜெனிதா, தேசிய நட்பு அமைப்பின் உத்தியோகத்தர் சுரேஷ் றுக்மனன் ஆகியோர் கலந்துகொண்டு பெண்கள் அமைப்பினருக்கு பயிற்சிகளை வழங்கினர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!