மெஸ்சி சிறந்த கால்பந்து வீரராக தேர்வு

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஆண்டு தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான பிபா விருதின் இறுதிப்பட்டியலில் லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்), விர்ஜில் வான் டிஜிக் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இதில் மெஸ்சி சிறந்த கால்பந்து வீரராக தேர்வு பெற்றார். அவர் 46 வாக்குகள் பெற்று வான்டிஜிக் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி பிபா விருதை பெற்றார். பார்சிலோனா அணிக்கு விளையாடும் மெஸ்சி 6-வது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றுள்ளார்.

அவர் இதற்கு முன்பு 2009, 2010, 2011, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதை பெற்று இருந்தார். இதே போல கிறிஸ்டியானோ ரொனால்டோவும் 6 முறை பிபா விருதை பெற்றுள்ளார்.

உலகின் சிறந்த கால் பந்து வீராங்கனையாக அமெரிக்காவை சேர்ந்த மேகன் ரபினோ தேர்வு செய்யப்பட்டார்.

உலகின் சிறந்த கோல் கீப்பராக பிரேசில் நாட்டை சேர்ந்த அலிசன் பெக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!