தேரரின் உடலை தீர்த்தக் கரையில் எரித்ததை வன்மையாக கண்டிக்கிறோம்

நீதிமன்ற உத்தரவை மீறியும், முல்லைத்தீவு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், தேரரின் உடலை தீர்த்தக் கரையில் எரித்ததை வன்மையாக கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கண்டனம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு செம்லை நீராவியடி பிள்ளையார் கோவில், வளாகத்தில் உயிரிழந்த தேரரின் உடலை எரிப்பதற்காக தென்னிலங்கை தேரர்கள் மற்றும் ஞானசார தேரர்கள் முனைந்ததும், நீதிமன்ற தீர்ப்பை மீறி தேரரின் உடலை எரித்தமை மிகவும் தவறான ஒரு விடயம்.

முல்லைத்தீவு மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடிய வகையில், செயற்பட்டதும் தவறான விடயம். ஆகையினால், இவ்வாறான விடயங்களை வன்மையாக கண்டிப்பதுடன், நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது, தேரரின் பூதவுடல் எரிக்கப்பட்டமை தொடர்பாக கேள்வியெழுப்ப உள்ளேன் என்றார்.

அத்துடன், முல்லைத்தீவு சம்பவத்தின் பின்னர், ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு முல்லைத்தீவு மக்கள் வலியுறுத்துகின்றார்கள்., அவரை கைதுசெய்ய பாராளுமன்றத்தில் வலியுறுத்துவீர்களாக என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்கையில், பத்திரிகைகளுக்காக கதைப்பது என்பது ஒன்று உள்ளது. அதனைத் தான் தமிழ் பிரதிநிதிகள் அங்கு செய்கின்றார்கள். ஆனால், எமது செயற்பாடு, நாங்கள் எதை முன்வைக்கின்றோமே, எதைப் பேசுகின்றோமோ, அதை வெளிப்படுத்துவதும், அதற்கு நடவடிக்கை எடுப்பதுமே எமது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!