மன்னார் வளைகுடாவில், 70 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 70 இலட்சம் ரூபா மதிப்பிலான தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தல்காரர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு கடத்த இருந்த 70 லட்சம் ரூபா மதிப்பிலான 350 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மண்டபம் மெரைன் பொலிஸார் கடத்தலுக்கு பயண்படுத்திய வாகனம் மற்றும் கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் மண்டபம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வரும் நிலையில் விசாரனைக்கு பின்னர் கடல் அட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில்; இலங்கைக்கு கடத்த இருந்த ஆயிரம் கிலோ தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் இலங்கையில் இருந்த கடத்தி வரப்பட்ட ஏழு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!