போராட்டத்தில் யாழ் மாவட்ட சட்டத்தரணிகளும் பங்கேற்பு!

நீதிமன்ற அவமதிப்புக்கு எதிரான போராட்டத்தில் யாழ் மாவட்ட சட்டத்தரணிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில், நேற்று இடம்பெற்ற சம்பவங்களைக் கண்டித்தே, யாழ் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளதுடன், இன்றைய வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு வருகைதந்தவர்களின் வழக்குகள் பிறிதொரு தினத்தில் தவணையிடப்பட்டுள்ளன.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகளின் கண்டனப் போராட்டத்திலும் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் இணைந்துகொண்டுள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!