உலக பருவநிலை மாற்ற மாநாடு!

உங்களால் அமைதியாக எப்படி இருக்க முடிகின்றது என உலக பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் 16வயதுச் சிறுமி ஒருவர் உலக தலைவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில், உலகத் தலைவர்களிடம் 16வயதுச் சிறுமி ஒருவர், பருவநிலை மாற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பியமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜக்கிய நாடுகள் சபையின் 74 ஆவது பொதுக்கூட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்றைய தினம் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு இடம்பெற்றது.

இந்த மாநாட்டின்போது 16வயதான சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் உரையாற்றியிருந்தார்.

இதன்போது, வெற்று வார்த்தைகளால் எனது குழந்தை பருவத்தையும், கனவுகளையும் திருடி விட்டீர்கள். நாம் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகு தொடர்பில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்;களின் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில், இளைய தலைமுறையை நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள். சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது.

மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பருவநிலை மாற்றத்தை உணர்ந்து அதை தடுக்க நீங்கள் உண்மையாக முயற்சி எடுக்காவிட்டால், நீங்கள் அரக்கர்களாகத்தன் இருக்க போகிறீர்கள்.

நான் உங்களை நம்பப்போவது இல்லை.

மாசு வெளியேற்றத்தை அடுத்த 10 ஆண்டுகளில் பாதியாக குறைக்கும் உலக நாடுகளின் திட்டம், 50 சதவீதம் மட்டுமே பலன் அளிக்க வாய்ப்புள்ளது.

மாற்றமுடியாத எதிர்வினைகளையும் இது ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என தனது உரையில் குறிப்பிட்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!