வடக்கு பாடசாலைகளுக்கு ஆளுநர் விசேட உத்தரவு!

வடமாகாண பாடசாலைகளில் வகுப்பு பிரிவுகளில் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக்கொள்ளக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்போது , பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை விட அதிகமாக காணப்பட்டதுடன் , அனுமதியின்றி மேலதிக பிரிவுகளும் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியினை மேற்கொள்ளும் போது மாகாண கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட வகுப்பு பிரிவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டவேண்டும். ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது.

இவ்விடயம் தொடர்பாக தனிப்பட்ட கவனத்தினை செலுத்தி மாகாண பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக சகல பாடசாலை அதிபர்களிற்கும் தெரிவித்து இவ்விடயத்தினை 2020ம் ஆண்டில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறும் இது தொடர்பான அறிக்கையினை சகல கல்விப் பணிப்பாளர்களிடமிருந்தும் பெற்று சமர்ப்பிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!