தபால் மூல வாக்களிப்பதற்கான சுற்றுநிருபம் அனுப்பி வைப்பு!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிருபம் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இம்மாதம் 30 ஆம் திகதி இரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என்றும் இந்த கால எல்லைநீடிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விண்ணப்பங்கள் கிடைத்தவுடன் அதனை உறுதிப்படுத்தி தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு வழங்குவது அவசியமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்குரிய 2018ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக அல்லது 1919 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!