ஏழாலையில் தாக்குதல்: ஒருவர் காயம்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலைப் பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சாரதி மீது இளைஞர்கள் குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்ற நிலையில், பெற்றோலியக்கூட்டுத் தாபன சாரதி உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சொந்தமான வாகனம் ஒன்று புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்தபோது, பின்னால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி விடாது இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏழாலையைச் சேர்ந்த இளைஞர் குழு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வாகனத்தின் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதன்போது அங்கு ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு இளைஞர்கள் உட்பட பெற்றோலியக் கூட்டுத்தாபன சாரதியும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயங்களுக்கு உள்ளாகியவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, ஏழாலைப் பகுதியில் அண்மைக்காலமாக இளைஞர் குழு ஒன்று, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், இது தொடர்பில் பொலிஸாரால் எவரும் கைது செய்யப்படவில்லை என அப் பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!