தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை தொரடர்பில் ஆய்வு!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துள்ள நிலையில், இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான தெரிவுக்குழு இன்று கூடி ஆராயவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து, மே மாதம் 22ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவில் ஜனாதிபதி, பிரதமர், புலனாய்வு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்டோர் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியம் வழங்கியதை அடுத்து அனைத்து சாட்சிப்பதிவுகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவுக்குழு அறிவித்தது.

இந்நிலையில், இதுவரை மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொண்ட சாட்சியங்கள் அனைத்தையும் கொண்டு அறிக்கையை இறுதி செய்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென தெரிவுக்குழு அண்மையில் குறிப்பிட்டது.

தெரிவுக்குழுவின் கால எல்லையை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றம் அனுமதி வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!