சிறப்புடன் நிறைவடைந்த கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா!

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா கடந்த இரண்டு நாட்களாக,காலை மற்றும் மாலை அமர்வுகளை உள்ளடக்கியதாக சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.

கிழக்கு மாகாண கல்வி,விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தமிழ் இலக்கிய விழா 2019இனை நடாத்தியது.

இந்நிலையில், தமிழ் இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வின் மாலை அமர்வுகள்
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துப்பண்டா தலைமையில் அருண் பிரசாத் அரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன கலந்து சிறப்பித்திருந்தார்.

மங்கல விளக்கேற்றப்பட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவன மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து அரங்க அறிமுக உரை, தலைமை உரை என்ப இடம்பெற்றதையடுத்து, கலை இலக்கிய விழாவின் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட சிறப்பு மலர் வெளியீடு இடம்பெற்றது.

சிறப்பு மலரினை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்குமாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், கிழக்குமாகாண ஆளுநரின் செயலாளர் ஜெ.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்த்தன மற்றும் கிழக்குமாகாண கல்வி, தகவல் ,தொழில் நுட்பக்கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு, மீள்குடியேற்ற திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும்; கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!