திருக்கோவிலில் வயோதிபப் பெண் மாயம் : பொலிசார் வலைவீச்சு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுகுட்பட்ட விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவர் நேற்று நண்பகல் முதல் மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாக திருக்கோவில் பொலிசில் பெண்ணின் கணவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவது யாதெனில், திருக்கோவில் விநாயகபுரம் 02 பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் குறித்த பெண் தனது மகளின் 2 வயது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் அயல் வீட்டுக்குச் 11.30 மணியளவில் சென்று இருந்த வேளை தனது வீட்டில் நாய் குரைப்பதைக் கேட்டு வீட்டைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு வயல் வேளை முடித்து வீடு திரும்பிய பெண்ணில் கணவரான சண்முகநாதன் கிருபைராசா என்பவர் வீட்டு மண்டபத்தில் குழந்தை தனியாக அழுது கொண்டு இருப்பதைப் கண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு மனைவினை அயல் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என தேடியுள்ளார் ஆனால் மனைவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் திருக்கோவில் பொலிசாருக்கு கணவரால் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடமத்திற்கு விரைந்த திருக்கோவில் பொலிசார் மற்றும் உளவுத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பொலிசாரும், குடும்பத்தினரும் பெண்ணைத் தேடி வருகின்றனர்

இவ்வாறு மர்மமான முறையில் மாயமாகியுள்ளவர் திருக்கோவில் விநாயகபுரம் 02யைச் சேர்ந்த வெற்றிவேல் கனகம்மா (மலர்) வயதுடைய மூன்று பிள்ளைகளில் தாயாவார்.

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!