அமெரிக்காவுடன் பேச ஈரான் விருப்பம் தெரிவிப்பு!

அமெரிக்காவுடன் பேசுவதற்கு ஈரான் விருப்பம் வெளியிட்டுள்ளது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது முதல் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் மோதல் நீடித்து வருகிறது.

அண்மையில் சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் வலுப்பெற்று உள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டால் கோபம் அடைந்த ஈரான், அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திடீரென அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷாரீப் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். நிரந்தரமான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச ஈரான் தயராக இருக்கிறது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை மதிப்புமிக்கதாகவும், நிரந்தரத் தீர்வை பற்றியதாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்த திடீர் முடிவு குறித்து அமெரிக்கா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!