ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் : மட்டு, வேலையற்ற பட்டதாரிகள்!

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால், ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கப்போவதாக தெரிவிக்கப்படும் அஞ்சல் அட்டைகள், தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அங்கு அஞ்சல் அட்டைகளை பூர்த்தி செய்து, அங்கிருந்து மட்டக்களப்பு பிரதான தபாலகம் வரையில் ஊர்வலமாக சென்று, தமது தேர்தல் பகிஸ்கரிப்பு தொடர்பான அறிவிப்பினை, தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், வேலையற்ற பட்டதாரிகள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் இணைந்து, பத்தாயிரம் அஞ்சல் அட்டைகளை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!