கோட்டாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது : நாணயக்கார!

ஜனாதிபதி தேர்தலில், கோட்டபாய ராஜபக்ச வெற்றி பெறுவதை தடுக்க முடியாமல், அவருக்கு எதிராக சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் சோசலிச மக்கள் முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவின் வெற்றி நிச்சயமாகும்.

அதனை தடுக்க முடியாமல், தற்போது அவருக்கு எதிராக, அவரின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு போன்ற சில்லரை பிரச்சினைகளை ஏற்படுத்தி, அவரை போட்டியிடாமல் தடுக்க சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயற்படும் சிவில் அமைப்புக்களே, இதனை மேற்கொண்டு வருகின்றன.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதற்கு, ஒருவரின் தேசிய அடையாள அட்டையோ, வெளிநாட்டு கடவுச்சீட்டோ தேவையில்லை.
குறிப்பிட்ட நபர் இலங்கை பிரஜையாக இருந்தால்போதும்.

இந்த விடயங்கள் கூட தெரியாமலே இவர்கள் கோட்டபாய ராஜபக்ஷ்வுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் நீதிமன்றமும் அவர்களின் மனுக்களை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனால் மக்கள் செல்வாக்கு யாருக்கு இருக்கின்றது என்பதை பார்க்க, இவ்வாறான சில்லறை விடயங்கள் ஒருபோதும் தாக்கம் செலுத்தாது.
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!