மன்னார் சிலாவத்துறை கணிகள் தொடர்பில் ஆராய்வு!

மன்னார் சிலாவத்துறையில் கடற்படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பில், வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது.


மக்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை பகுதியை சேர்ந்த மக்கள், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, புத்தளம், அனுராதபுரம், குருணாகல், கற்பிட்டி போன்ற பிரதேசங்களில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர், குறித்த மக்கள் சிலாவத்துறை பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு என வருகை தந்த போது, மக்களின் நிலங்களின் கடற்படையினர் பாரிய முகாம் அமைத்திருந்தனர்.

தபாலகம், ஆரம்ப சுகாதார நிலையம், பாடசாலை நூலகம், கோவில், பள்ளிவாசல் உட்பட மக்களின் காணிகள் 28 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் ஆக்கிரமித்திருந்த நிலையில், கடந்த வருடம் தங்கள் பூர்வீக நிலங்களை, கடற்படையினர் விடுவித்து அருகில் உள்ள அரச காணிகளில் முகாம்களை அமைக்குமாறு கோரிக்கை விடுத்து, சிலாவத்துறை கடற்கரை முகாமுக்கு முன்பாக, மக்கள் சாத்வீக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியாக, கடந்த மாசி மாதம் 22 திகதி, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் உதவியுடன், மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில், காணிகளை கடற்படை விடுவித்து தருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரி, முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்ட நிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பாக கவனம் செலுத்திய மனித உரிமை ஆனைக்குழு, இன்று ஆராய்ந்துள்ளது.

முசலி பிரதேச செயலாளார், சிலாவத்துறை கடற்படை பொறுப்பதிகாரி மற்றும் வடமேல் கடற்படை கட்டளை தளபதி, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக பிரதிநிதிகளை அழைத்து, வவுனியா மனித உரிமை ஆணைக்குழு, தனது காரியாலயத்தில் விசாரணைகளை முன்னெடுத்தது.

அதனடிப்படையில் இன்றைய விசாரணையின் போது குறித்த கானியானது தேசிய பாதுகாப்பிற்கு அவசியமானது என்பதனால் குறித்த காணியை சட்ட ரீதியாக கடற்படைக்கு உரித்தக்குவதற்கான செற்பாடுகள் இடம் பெறுவதாகவும்.

குறித்த கடற்பகுதியூடாக போதை பொருட்கள் பாரிய அளவு கடத்தப்படுவதாகவும் எனவே அவ் காணி தேசியபாதுகாப்புக்கு அவசியம் என கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் பாதிக்கப்பட மக்களுக்கு நஸ்ர ஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதாக பிரதேச செயலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பகவும் மெசிடோ நிறுவனம் சார்பாகவும் முன்னிலையான சட்டதரணி அர்ஜூன், குறித்த காணிகள் மக்கள் பூர்விகமாக வாழ்கின்றனர் என்பதன் அடிப்படையில் விடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன் அரசகாணிகளை கடற்படை பயன்படுத்து மாறு கோரிகை விடுத்த போதிலும் கடற்படையினறால் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எனினும் பாதிக்கப்பட மக்கள் சார்பாக ஆஜாராகிய பிரதிநிதிகள், எக்காரணத்;திற்காகவும் நாங்கள் பூர்விகமாக வாழ்ந்த காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது எனவும் எமத்கு காணிகளை பெற்று கொள்ளும் வரை தாங்கள் போராடபோவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விசாரணைக்கு அழைக்கப்பட்ட வடமேல் கட்டளைதளபதி முள்ளிக்குளம் விசாரணையின் போது பிரசன்னம் ஆகியிருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!