இந்த அரசாங்கத்திற்கு சவால்களை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை : ஜி.எல்.பீரிஸ்

கோட்டபாய ராஜபக்ச தலைமையின் அரசாங்கமே, சவர்வதேச சவால்களை சந்திப்பதற்கு அவசியம் என, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று போர் முடிந்துவிட்டது. ஆயுதப் போர் முடிந்த போதிலும் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விட்டதாக எண்ண வேண்டாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் முயற்சி செய்தது போல, எமது இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரை பழிவாங்குவதற்கு, புலம்பெயர்ந்த சமூகம் வகைதேடிக் கொண்டிருக்கின்றது.

எமது படையினர், பொலிஸார் அதிகாரிகளை சிறைக்குள் தள்ளும் வரை முயற்சிகளை முடிவுறுத்த மாட்டோம் என்பதை புலம்பெயர் சமூகத்தினர் பல்வேறு சர்வதேச சக்திகளுடன் இணைந்து கூறிவருகின்றன.

தென்னாபிரிவிக்காவின் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதி யஸ்மின் சூக்கா, மேற்குலக நாடுகளிடம் இருந்து கோடிக்கணக்கான நிதியைப் பெற்று, எமது படையினர் மற்றும் பொலிஸாருக்கு எதிராக மிகவும் பொய்யான தகவல்களைத் திரட்டி, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்பித்திருக்கின்றார்.

பொலிஸ் சேவையிலுள்ள 58 அதிகாரிகளுக்கு எதிராக, போர்க் குற்றச்சாட்டு இருப்பதாகவும், அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் கூறிவரும் அவர், அதற்காக 73 சாட்சியங்களை முன்நிறுத்தவும் முயற்சித்து வருகின்றார்.

முதுகெலும்பற்ற இந்த அரசாங்கத்திற்கு, அந்த சவாலை எதிர்கொள்ள தைரியமில்லை. கோட்டபாய ராஜபக்சவின் தலைமையின் கீழான அரசாங்கமே, இவ்வாறான சவால்களை சந்திப்பதற்கு அவசியமாகும்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!