14ஆவது நாளாகவும் தொடரும், தென் கிழக்கு பல்கலை கல்விசாரா ஊளியர் போராட்டம்!

தென் கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பின் 14 ஆவது நாளான இன்று, அடையாள போராட்டமாக முன்டெடுக்கப்பட்டது.

வரவு செலவுத்திட்டத்தில் தெரிவித்த ஊதிய உயர்வை பெற்றுத்தர தயங்குவதாகவும், 2 ஆயிரத்து 500 ரூபா சம்பள உயர்வானது, ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட போதும், கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் எனவும், போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.

நாடளாவிய ரீதியில் 27 பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்த்து தீர்வு தரும் வரை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!