நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு -(UPDATE)

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு மரணமான நிலையில், அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார் ஆலயத்தரப்பினர் தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணை தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணைகாக பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு வருகை தந்த பின்னர் தற்போது நீராவியடி பிள்ளையார் ஆலயம் நோக்கி சென்றுள்ளனர்.

வழக்கு விசாரணைகாக சிங்கள சட்டத்தரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

ஆலய நிர்வாகம் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம், மணிவண்ணன் , சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியுள்ளனர்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!