30 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல் பிரதமருக்கு ஆதரவு வழங்கும் அரபு கட்சிகள்

கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலில் உள்ள அரபு கட்சிகள் எந்த பிரதமருக்கும் தங்கள் ஆதரவை அளித்ததே இல்லை. பெஞ்சமின் நெதன்யாஹூ மீதான கோபம் அந்த அரபு கட்சிகளை 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பிரதமரை ஆதரிக்க வைத்திருக்கிறது.

அண்மையில் இஸ்ரேலில் தேர்தல் நடந்தது. இது கடந்த ஓராண்டில் நடக்கும் இரண்டாவது பொதுத் தேர்தல். முதலில் நடந்த தேர்தலில் ஆட்சி அமைக்கக் கூட்டணி எட்டப்படாத சூழலில் மீண்டும் தேர்தல் நடந்தது. இதிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்க பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சில இஸ்ரேல் மற்றும் அரபு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் இராணுவ தளபதி பென்னிக்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளனர். இஸ்ரேல் அரபு குழுவின் தலைவர், “நாங்கள் பென்னியையோ அவரது கொள்கைகளையோ ஆதரிக்கிறோம் என்பது அர்த்தம் அல்ல. பெஞ்சமின் மீண்டும் ஆட்சி அமைக்காமல் தடுக்கவே இந்த முடிவினை எடுத்துள்ளோம்.” என்றார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!