அம்பாறை பெரியநீலாவணையில், சித்தப்பாவால் சீரழிந்த 16 வயது சிறுமி!

அம்பாறை பெரியநீலாவணை பகுதியில் தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக, மாணவி ஒருவர் 4 மாதம் கர்ப்பிணியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணையில் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரான மாணவியின் சித்தப்பா இன்று கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் கர்ப்பம் தரித்துள்ள மாணவி கடந்த காலங்களில் பெரிய நீலாவணையில் தொடர்மாடி குடியிருப்பில் வசித்துள்ளதுடன், பெரிய நீலாவணை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று 10 ஆம் தரத்துடன் இடைவிலகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த தொடர்மாடி குடியிருப்பில் வசித்த குற்றம்சாட்டப்படும் நபர், மாணவியுடன் தகாத உறவினை கொண்டு தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையில், மாணவி இடையிடையே மயக்கமடைந்துள்ளமையினால், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த சந்தேக நபர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!