அம்பாறையில், காட்டு யானைகளால் மக்கள் பாதிப்பு!

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாக்காடு பகுதியில் கைவிடப்பட்ட தனியான யானை மக்களை தாக்கி வருவதுடன் உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளது.

இவ்வாறு அலைந்து திரியும் குறித்த யானை மக்களின் குடியிருப்பிற்கு அண்மையில் சென்று அச்சுறுத்துவதுடன் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளையும் மிரட்டிவருகின்றது.

நேற்று முதல் குறித்த பிரதேசத்திற்கு தனியாக வந்துள்ள இந்த யானையை யானை கூட்டத்தால் தனித்து விடப்பட்ட யானை என்று மக்கள் அழைக்கின்றனர்.

வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு குறித்த யானை தொடர்பில் விவசாயிகள் தகவல் வழங்கி உள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!