இந்தியா, ராஜஸ்தானில் விசித்திரக் குழந்தை!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு கால்கள், மூன்று கைகள் மற்றும் இரண்டு பாலுறுப்புகளுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ராஜஸ்தானின் டோங்கில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் 24 வயதுடைய பெண் ஒருவரே சுகப்பிரசவத்தில் இவ்வாறு இரண்டு பாலுறுப்புகளையுடைய குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

ஆண் குழந்தையும், பெண் குழந்தையுமே இவ்வாறு ஒட்டிப் பிறந்துள்ளன.

ஆண் குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்த போதும் பெண் குழந்தையின் கால்கள் ஒரு கை மார்பு மற்றும் அடி வயிறு என்பன ஆண் குழந்தையின் உடலுடன் ஒட்டியுள்ளன.

இதன் காரணமாக ஆண்குழந்தை சுவாசிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது இதனால் மேலதிக அறுவைச் சிகிச்சைக்காக ஜெய்ப்பூரில் உள்ள வைத்தியசாலைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!