மட்டக்களப்பில் தமிழ் இலக்கிய விழா!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மட்டக்களப்பில் நடாத்தும் 2019 ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழா மிக சிறப்பாக நடைபெறுகின்றது.

2019ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழாவின் முதல் நாள் நிகழ்வாக, முதலாவது பண்பாட்டுப் பேரணி மட்டக்களப்பு புனித செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி, கல்முனை பிரதான வீதி ஊடாக நிகழ்விடத்தை வந்தடைந்தது.

இரண்டாவது பேரணி மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலய முன்பாக இருந்து ஆரம்பமாகி திருமலை பிரதான வீதி ஊடாக ஊர்வலமாக அரசடி தேவநாயகம் விழா மண்டபத்தை வந்தடைந்தது.

கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் ஆரம்பமான காலை நேர இலக்கிய விழா நிகழ்வு, எம்.எஸ்.எஸ்.ஹமீத் அரங்கில் ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக தமிழ் தாய்க்கு மாலை அணிவித்து மங்கள விளக்கேற்றி, தமிழ் தாய் வணக்கம் மற்றும் நாட்டியப்பள்ளி மாணவர்களின் நர்த்தன பவனத்துடன் ஆரம்பமானது.

இதனை தொடர்ந்து அரங்கு அறிமுகம், தலைமையுரை, தொடர்ந்து ‘பிரதிகளின் உயிர்ப்பு’ எனும் தலைப்பில் பேசாப் படைப்பைப் பேசுதல் போன்ற பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!