கிளி, வட்டக்கச்சி பகுதில் மக்கள் குடிமனைக்குள், யானை அட்டகாகம் !

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சி பகுதியில் நேற்று நள்ளிரவு குடிமனைக்குள் புகுந்த யானையை விரட்ட சென்ற ஒருவர் யானையால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில், யானை ஒன்று மக்களை கடந்த மூன்று நாட்களாக தொந்தரவு செய்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள தென்னந்தோப்பினையும் குறித்த யானை சேதமாகக்கியுள்ளது. இதனால் பயன்தரும் மரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது நெல் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், அதனையும் யானை சேதமாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மக்கள் குடியிருப்புக்குள் சென்ற யானையை துரத்த முற்பட்டபோதே யானையின் தாக்குதலுக்கு ஒருவர் இலக்காகியுள்ளனர்.

இதனால் காயங்களுக்குள்ளான ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் அப்பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் யானையிடமிருந்து பாதுகாப்பினை ஏற்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!