வவுனியாவில், இலவச கல்வி நிலையம் திறப்பு!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையம் முன்னர் அமைந்திருந்த நிலம் 23 வருடங்களின் பின்னர் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த காணியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட இளைஞர், யுவதிகளிற்கான நிறுவனம் சார் கல்வி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அமரர் க.சிவசிதம்பரம் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட இவ் இலவச கல்வி நிறுவனத்தின் பெயர்ப் பலகையினை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் திரைநீக்கம் செய்து வைத்ததுடன், கட்டடத்தினை

வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா நாடா வெட்டித்திறந்து வைத்தார்.
அத்துடன் கணணி அறையினை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்திஸ்ரீ திசநாயக்க நாடா வெட்டி திறந்து வைத்தார்.

நிறுவனத்தின் ஸ்தாபகர் சிவசிதம்பரம் ரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!