மட்டு, ஆரையம்பதியில் மிளகாய் அறுவடை நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி விவசாய விரிவாக்கல் பிரிவில் உள்ள கோவில்குளம் கிராமத்தில் உயர்தர மிளகாய் முன்மாதிரி செய்கையின் அறுவடை விழா நேற்று நடைபெற்றது.

கோவில் குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரால், விவசாயத் திணைக்களத்தின் கண்காணிப்பு மற்றும் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விவசாயத் திட்டமே இதன்போது அறுவடை செய்யப்பட்டது.

ஆரையம்பதி பிரிவு விவசாயப் போதனாசிரியர் கு.ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, மட்டக்களப்பு மத்தி விவசாய பிரிவின் உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.எம்.சலீம் மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விவசாயத் திணைக்களத்தினால் குறித்த விவசாயியைக்கொண்டு முன்மாதிரியாக, சிறந்த உயர் தரமுடைய மிளகாய் செய்கை பண்ணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!