வவுனியாவில் விபத்து: ஒருவர் காயம்!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருமன்காட்டு சந்தியில் வீதியின் மறுபக்கம் செல்ல முற்பட்ட நபரை, மன்னார் வீதியுடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்தில் திருநாவற்குளத்தினை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க சிதம்பரம் செல்லத்துரை என்ற நபரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து 50 மீற்றர் தொலைவில் பாதசாரிகள் கடவை இருந்தும், குறித்த நபர் பாதசாரிகள் கடவையினை பயன்படுத்தாது வீதியினூடாக அவதானமின்றி கடக்க முற்பட்ட சமயத்திலிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!