அரோகன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி இன்று!

புகழ்பெற்ற மோட்டோ ஜிபி பைக் பந்தயத்தின் அரோகன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி ஸ்பெயினில் இன்று நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் ஸ்பெயினின் மார்க் மார்குவஸ் போட்டி தூரத்தை ஒரு மணி நேரம் 47 நிமிடங்களில் கடந்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தகுதிச்சுற்று போட்டிகளில் முதல் இடம் வென்றதன் மூலம் மார்க் மார்குவசிற்கு இன்று நடைபெறவுள்ள பந்தயத்தில் முன் வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜிபி புள்ளிப்பட்டியலில் இத்தாலியின் டானிலோ பெட்ரூசி மற்றும் ஆண்டிரியா டோவிசியாசோ ஆகியோரை பின்தள்ளி 275 புள்ளிகளுடன் ஸ்பெயினின் மார்க் மார்குவஸ் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!