ஈராக்கில் பயங்கரவாத தாக்குதல்:21 பேர் உயிரிழப்பு!

ஈராக்கில் நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈராக்கில் ஷியா முஸ்லிம்களின் புனித தலமான கர்பாலா நகர் அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த வாகனத்தை இலக்குவைத்து நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஈராக்கில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்த ஐ.எஸ். அமைப்பினர், அங்கிருந்து முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டதாக 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

எனினும், மக்களோடு கலந்துள்ள ஐ.எஸ். பயங்கரவாத குழுவினர், தமது தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர்.

ஈராக்கில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஐ.எஸ் அமைப்பு நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!