கண்டியில் சமூக, சமய நல்லிணக்க செயற்பாடு முன்னெடுப்பு!

தெஹியத்த கண்டிய ஸ்ரீ சுதர்சனாராம தமனவெல பேபடகம விகாரைக்கு சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் குடிநீர் வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

சமூக சமய நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு தைபா சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில், சவூதி அரேபியா நாட்டின் நிதியுதவியில், நீண்ட காலமாக சுத்தமான குடி நீர் வசதியின்றி காணப்பட்ட தெஹியத்த கண்டிய ஸ்ரீ சுதர்சனாராம தமனவெல பேபடகம விகாரைக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நிர்மாணிக்கப்பட்ட ஆழ் குழாய்க் கிணற்றை மக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு விஹாராதிபதி பொல்கொட்டுவ வனரதன ஹிமி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தைபா சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் மௌலவி எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி கலந்து கொண்டார்.

அத்துடன் மௌலவி அஷ்ரப், தெஹியத்தக கண்டி பொலிஸ் சிவில் சேவை பொலிஸ் அதிகாரி மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!