ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு நியமனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜானக டி சில்வா தலைமையில் விசேட ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

ஐவர் அடங்கிய குறித்த குழு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு மற்றும் விசாரணை செய்வதுடன் அறிக்கையிடுதல், அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதியரசர் ஜானக டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக் குழுவில் மேன்முறையீட்டு நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன, இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதியரசர்களான நிஹால் சுனில் ராஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து மற்றும் இளைப்பாறிய அமைச்சுச் செயலாளர் டபிள்யூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த ஆணைக் குழுவானது எதிர்வரும் 6 மாதங்களுக்குள் தமது விசாரணைகளை பூர்த்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!