விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சனவப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி, புதிதாக கொள்வனவு செய்த துவிச்சக்கர வண்டியில், சாவற்கட்டு ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர், கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த வீதியால் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள், முதியவரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில, விபத்தில் சிக்கி மயக்கமுற்றிருந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

கடந்த 11 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, முதியவர் விபத்தில் சிக்கிய தினத்தன்று அவர் பயணித்த புதிய துவிச்சக்கரவண்டி விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து இனந்தெரியாதவர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!