நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவேண்டும்:எம்.ஏ.சுமந்திரன்!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தேர்தலின் பின் நீக்க முயற்சி செய்யும் அமைச்சர்கள், 20ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டுவர ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் 25 வருட வாக்குறுதியை மரணத்தின் இறுதித் தருணத்திலேனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஆனால் அதனைச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்று கூறுபவர்களுக்கு தான் சவால் விடுப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

‘ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பீர்கள் எனின் அதற்கு முன்கூட்டிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் இப்போதே பாராளுமன்றத்தில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுங்கள்.

அதன்மூலம் ஜனாதிபதி முறை ஒழிப்பிற்கான முதற்படியை எடுத்து வைத்து விட்டோம். அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேர்தலின் பின்னர் முன்னெடுப்போம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்குங்கள்.

அதனைக்கூடச் செய்ய முடியாது என்றால், அவர்களுடைய கொள்கை உண்மையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதாக இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!