ராஜனி திராணகமவின் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்கூற்றியல் துறைத் தலைவரும், முறிந்த பனை புத்தகத்தின் சக ஆசரியரும், சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி ராஜனி திராணகமவின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்;ப்பாணத்தில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

ராஜனி திராணகம ஞாபகார்த்தக் குழுவினரும், சகவாழ்வுக்கான யாழ்ப்பாணம் மக்கள் ஒன்றியமும் இணைந்து நடாத்திய இந்நிகழ்வு, யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் அகிலன் கதிர்காமர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் ராஐனியின் நினைவுப் பேருரையை கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் பர்ஷானா ஹனிபா ஆற்றியிருந்தார்.

நிகழ்வில் அவருடைய நண்பர்களும் உரையாற்றியதுடன், பாடல்களும் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ராஐனியின் உறவினர்கள், நண்பர்கள். மதத்தலைவர்கள், பொது மக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!