சீனாவால் உலகிற்கு அச்சுறுத்தல்-டொனால்ட் ட்ரம்ப்!

இராணுவ பலத்தைப் பெருக்கும் சீனாவால் உலகிற்கே அச்சுறுத்தல் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனா தனது இராணுவச் செலவினங்களை 7 வீதத்தால் அதிகரித்து 152 பில்லியன் டொலர்களாக உயர்த்தியதையடுத்து வொஷிங்டனில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காகவே இராணுவ பலத்தை சீனா அதிகரிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து வர்த்தக ரீதியாக அங்கு செல்லும் தொகை, இராணுவ பலத்தை அதிகரிக்கவே பயன்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 500 பில்லியன் டொலர்களை சீனா கொண்டு செல்வதை அனுமதித்ததாகவும், சீனா அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை அபகரிப்பதை அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இரு நாடுகளும் இது தொடர்பாக நெருக்கமாக பேச்சு வார்த்தைகள் நடத்தியபோதும், இறுதியில் சீனா ஏற்றுக் கொள்ள மறுத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!