தேர்தல்கள் ஆணைக்குழுவால் தடை விதிப்பு!

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரையிலுள்ள காலப் பகுதியில் காணி உறுதிகள் வழங்குதல், நடமாடும் சேவை நடாத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையிலும் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரித்து இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையும் மீறி நடைபெற்றால், அதற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் தினங்களில் வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!