பாலமீன்மடுவில் ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவில் மருந்தாளர் இல்லை!

மட்டக்களப்பு பாலமீன்மடு ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவின் மத்திய மருந்தகத்தில், கடந்த 10 நாட்களாக மருந்து வழங்குபவர் கடமையில் இல்லாத நிலையில் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் அலுவலக பிரிவின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு பாலமீன்மடு ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவின் மத்திய மருந்தகத்தில், மருந்து வழங்குவதற்கு ஒருவர் இல்லாத நிலையில் இயங்கி வரும் மத்திய மருந்தகத்தில் வைத்தியராக பணிபுரியும் வைத்தியரே மருந்துகளை வழங்கும் பணியினை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பாலமீன்மடு ஆரம்ப மருத்துவ சிகிட்சை பிரிவின் மத்திய மருந்தக வைத்திய அதிகாரியிடம் டான் செய்திகள் கேட்டபோது, மருந்தகத்தில் மருந்து வழங்குபவராக பணியாற்றியவர் கடந்த 10 நாட்களாக சுகயீனமுற்ற நிலையில் எவ்வித அறிவித்தல்களும் இன்றி கடமைக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால், இந்த பணியினை தான் செய்து வருவதாகவும் இது தொடர்பாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் அலுவலக வைத்திய அதிகாரிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் வைத்திய அதிகாரி எம்.அச்சுதன், முறைப்பாட்டினை பாலமீன்மடு ஆரம்ப மருத்துவ சிகிட்சை பிரிவின் மத்திய மருந்தக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு, உடனடியாக இதற்கான நடவடிக்கையினை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!