சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக சவூதி அரேபிய பாதுகாப் புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

சவூதி அரேபியாவில் அரம்கோ நிறு வனத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடந்த 14 ஆம் திகதி ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத் தினர்.

ரியாத் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டின் பாதுக்காப்புத்துறை செய்தித் தொடர்பாளர், துர்க்கி அல்-மால்கி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை வெளியிட்டார்.

இந்நிலையிலேயே அமெரிக்க தானது  இராணுவ படைகளை சவூதி அரேபியாவிற்கு  அனுப்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.