ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல்:09 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படையினர் பயணித்த வாகனத்தினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தான் படையினருடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. எனினும், தலிபான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.

அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தலிபான்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தின் ஹஸ்டர் சந்தை பகுதியில் அமெரிக்கப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இந்த தாக்குதலில் அமெரிக்கப் படையினர் 8 பேர் மற்றும் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலிற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!