மன்னார் தாழ்வுப்பாடு ‘புனித சூசையப்பர் வாசாப்பு’ நிகழ்வு!

மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாழ்வுப்பாடு ‘புனித சூசையப்பர் வாசாப்பு’ நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

தாழ்வுப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை பிலிப்புப்பிள்ளை ஜேசுராஜா ஏற்பாட்டில், அண்ணாவியார் கிறிஸ்ரியன் டயஸ் தலைமையில் நேற்று மாலை 6 மணிக்கு புனித வளனார் பாடசாலை மைதானத்தில் புனித சூசையப்பர் வாசாப்பு’ நிகழ்வு ஆரம்பமானது.

சுமார் 100 வருடங்களுக்கு முற்பட்ட தென்மோடி கூத்து தாழ்வுப்பாட்டு பங்கு மக்களால் நடத்தப்படும் குறித்த ‘வாசாப்பு நிகழ்வானது’ கடந்த 4 வருடங்களின் பின்னர் நேற்று இரவு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் என்.முஜாஹீர் ஆகியோர் கலந்துகொண்டதோடு, அழைக்கப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டதோடு, தாழ்வுப்பாட்டு கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

குறித்த ‘வாசாப்பு நிகழ்வின்’ இறுதி நாள் நிகழ்வு இன்று இரவு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!