ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை நிறுத்த வேண்டும்!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், வெற்றிபெறும் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள்
உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், வெற்றிபெறும் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தானும், மக்களும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுப்பதாக மலைநாட்டு புதிய கிராமங்கள்உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டுமென கூறுவதை தாங்கள் ஏற்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டன் டி.கே.டபில்யூ கலாசார மண்டபத்தில் நேற்று 483 பயனாளிகளுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

ஹட்டன் டி.கே.டபில்யூ கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற குறித்த நிகழ்வில், 483 பயனாளிகளுக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியில் தலைவரும் விசேட அபிவிருத்தி அமைச்சருமாகிய வே.இராதாகிருஸ்ணன், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான எம்.உதயகுமார், சோ.ஸ்ரீதரன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோரன்ஸ், பிரதேசசபை உறுப்பினர்கள், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித்தலைவர் பா.சிவனேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!