உலக சமாதன தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

எஹட் ஹரிதாஸ் அமைப்பின் ஏற்பாட்டில், உலக சமாதான தினம் இன்று மாலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

அமைதியான காலநிலைக்கு கைகொடுப்போம் என்னும் தலைப்பில் இந்த உலக சமாதான தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஹரிதாஸ் எகட் அமைப்பின் இயக்குனர் அருட்தந்தை ஜி.அலெக்ஸ் ரொபட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் விகாரையின் விகாராதிபதி பட்டபொல குணானந்த தேரர், மண்முனை வடக்கு பல்சமய ஒன்றியத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ கருணாகரன் மகேஸ்வர குருக்கள், ஆரையம்பதி பல் சமய ஒன்றிய மௌலவி மாதவி மக்கி உட்பட மூன்று மதங்களின் மதத் தலைவர்களும் பொது மக்களும், சமூக சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் காலநிலைக்கு கைகொடுப்போம் என்னும் தலைப்பில் ஆயர் இல்ல பகுதியில் மரம் ஒன்று நடப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சமாதானத்தை குறிக்கும் வகையில் சமய தலைவர்களினால் கால நிலையை நாங்கள் சிறந்த முறையில் பெறுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சமாதானத்தின் அவசியம், அதன் வழிமுறைகள் குறித்து கருத்துரைகள் வழங்கப்பட்டன.

சர்வதேச சமாதான தின நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அதிதிகளினால் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

தற்போது உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!